‘போலீசாருக்கெல்லாம் சல்யூட்...’ - நடிகர் சூரி நெகிழ்ச்சி டுவிட்

police salute actor-soori viral-twitter நடிகர் சூரி போலீசாருக்கெல்லாம்சல்யூட்
By Nandhini Apr 15, 2022 09:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி.

இவர் சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடி குழு’ என்ற படத்தில் வரும் பரோட்டா காமெடி மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். அப்படத்திலிருந்து அவர் ‘பரோட்டா சூரி’ என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறார்.

இதனையடுத்து, நடிகர் விஜய், அஜீத், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் முன்னணி நடிகருடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், பெத்தவுகளுக்கு கூட பிள்ளைய அடிக்க உரிமை இல்லை. ஆனா, போலீஸ்க்கு ஜனநாயகம் கையில் பிரம்பு தந்துருக்கு. பெத்தவரின் பொறுப்பு, வாத்தியாரின் கண்டிப்பு, நண்பனின் கனிவு ஒருசேர கடைபிடிக்கும் போலீசாருக்கெல்லாம் சல்யூட். ஆகச் சிறப்பு படைப்பு என்று ‘டாணாக்காரன்’ படம் குறித்து பதிவிட்டுள்ளார்.