ரெட்டை கதிர்... இரட்டை பிறவியான நடிகர் சூரி - வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி
காமெடி நடிகர் சூரி இரட்டை பிறவி என்று அவரே வெளியிட்ட பதிவை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் படிப்படியாக உயர்ந்து தற்போது உச்சத்தை அடைந்தவர் தான் நடிகர் சூரி.
ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து எப்படியாவது சினிமாவில் முன்னேற வேண்டும் என்ற வெறியுடன் தனது திறமையால் இன்று முன்னணி காமெடி நடிகராக உருவாகியுள்ளார்.
இந்நிலையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் சூரிக்கு திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். ஆனால் சூரியோ அவரது சகோதரருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்தில் சூரி வெளியிட்டுள்ள பதிவில், ”ஒரே வயிற்றில் ஒரே நேரத்தில் இரட்டை பிள்ளையாய் எனக்கு அடுத்து பிறந்தவன் லெட்சுமணன், உழைப்பிலும் திறமையிலும் உயர்ந்தவன்.
என்னைவிட புகழ் பெற்றிருக்க வேண்டியவன். முந்திப் பிறந்ததால்தான் இந்த முன்னேற்றம் என்றால், உனக்குப் பின்னால் பிறந்திருப்பேன் தம்பி. அடுத்த ஜென்மத்தில் நீயே அண்ணனாக பிறக்க வேண்டுகிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதை கண்ட அவரது ரசிகர்கள் நடிகர் சூரி இரட்டை பிறவியா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.