முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்ச ரூபாய் நிதி வழங்கிய நடிகர் சூரி..!

actor soori provide money
By Anupriyamkumaresan Jun 04, 2021 04:43 AM GMT
Report

தமிழ் திரைப்பட நடிகர் சூரி, 10 லட்சம் ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு திரைபிரபலங்கள், நிறுவனங்கள் என ஏராளமானோர் தாமாகவே முன் வந்து தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி வருகின்றனர்.

முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்ச ரூபாய் நிதி வழங்கிய நடிகர் சூரி..! | Actor Soori Provide Money To Udhaynidhi

இதுவரை நடிகர்கள் ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, இயக்குனர் ஷங்கர், வெற்றிமாறன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் நிதியுதவி அளித்துள்ளனர்.

இந்நிலையில் காமெடி நடிகர் சூரி கொரோனா பேரிடர் நிதியாக 10 லட்ச ரூபாயை எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினிடம் இன்று வழங்கினார்.

இதோடு தன் மகள் வெண்ணிலா மற்றும் மகன் சர்வான் சார்பில் 25 ஆயிரம் ரூபாயையும் கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.