தல என்னைக்குமே தல தான் : சிஎஸ்கே வெற்றியை துள்ளி குதித்து கொண்டாடிய நடிகர் சூரி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை நடிகர் சூரி துள்ளிக்குதித்து கொண்டாடும் வீடியோ , சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரில் நேற்று மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் அதிரடியால் சிஎஸ்கே வெற்றி பெற்றது.இதே மைதானத்தில் தான் 2010ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் மும்பை அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தி முதல் கோப்பையை வென்றது.
தற்போது 12 ஆண்டுகள் கழித்து, ஐபிஎல் 15வது சீசனில் மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு சிஎஸ்கே முடிகட்டியுள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த தோல்வியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் சீசன் தொடக்கத்தில் தொடர்ந்து 7 போட்டிகளில் தோற்ற அணி என்ற சோகமான சாதனையை மும்பை இந்தியன்ஸ் படைத்தது. தோனியின் ஆட்டத்தை கண்டு ரோகித் சர்மா தலையில் கையை வைத்து, மைதானத்தில் படுத்துவிட்டார்.
Thala thalathan #msd #MSDhoni #csk #yellove #ipl2022 #BCCI #ipl pic.twitter.com/8eST2IYdwM
— Actor Soori (@sooriofficial) April 21, 2022
ஜடேஜா தோனிக்கு தொப்பியை கழற்றி மரியாதை செய்தார். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகும் நிலையில் நடிகர் சூரி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியை துள்ளிக்குதித்து கொண்டாடும் வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் தல தல தான் என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.