நடிகர் சோனு சூட் குடும்பத்திற்கு இபப்டி ஒரு நிலைமையா? சோனு சூட் விளக்கம்!
என் மகனுக்காக 3 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார் எதுவும் வாங்கவில்லை என நடிகர் சோனு சூட் விளக்கமளித்துள்ளார்.
நடிகர் சோனு சூட் கொரோனா பேரிடர் காலங்களில் ஏழை, எளிய மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது மூத்த மகனுக்கு கார் ஒன்று வாங்கி கொடுத்துள்ளதாக தகவல் வெளியானது. தந்தையர் தினத்திற்காக சோனு சூட் இந்த காரை தன் மகனுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளதாகவும் தகவல் கசிந்தது.
இந்த நிலையில் இதனை மறுத்து நடிகர் சோனு சூட் விளக்கமளித்துள்ளார். என் மகனுக்காக விலை உயர்ந்து கார் ஏதும் வாங்கவில்லை என்றும், அந்த கார் எங்கள் வீட்டுக்கு சோதனை ஓட்டத்திற்காக கொண்டு வரப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

அதுவும் தந்தையர் தினத்திற்காக நான் ஏன் எனது மகனுக்கு அன்பளிப்பு வழங்க வேண்டும். அவன்தான் எனக்கு அன்பளிப்பு கொடுக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அனைத்தையும் விட இந்த தந்தையர் தினத்தில் எனது இரு மகன்களும் என்னுடன் இருப்பதே எனக்கான சிறந்த அன்பளிப்பாக இருக்க முடியும் எனவும் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.