சிவசங்கர் மாஸ்டர் உயிரைக் காப்பாற்ற போராடும் நடிகர் சோனுசூட் - நெகிழ்ச்சியில் ரசிகர்கள்

பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டரின் மருத்துவ செலவுக்கு பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் உதவியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 800 படங்களில் நடன இயக்குனராக மற்றும் சில படங்களில் நடிகராக பலரால் அறியப்பட்டவர் சிவசங்கர் மாஸ்டர். குறிப்பாக தனுஷ் நடித்த திருடா திருடி படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடலில் பணியாற்றியதின் மூலம் சிவசங்கரின் புகழ் மேலும் அதிகமானது.

இதனிடையே சிவசங்கர் மாஸ்டர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தகவல் வெளியானது. 

ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.5 லட்சம் வரை செலவாவதாகவும், அதனால் திரையுலகைச் சேர்ந்தவர்கள் உதவி புரியுமாறும் இளைய மகன் அஜய் கிருஷ்ணன் சமூக வலைத்தள பக்கத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில் சிவசங்கர் மாஸ்டர் தொடர்பான ட்வீட் ஒன்றுக்கு பதில் அளித்துள்ள பாலிவுட் நடிகர் சோனு சூட், தான் அவரது குடும்பத்தினருடன் தொடர்பில்தான் இருப்பதாகவும் அவரது உயிரை காக்க தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்வதாகவும் கூறியுள்ளார். 


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்