ஹனிமூன் சென்ற இடத்தில் அசந்து தூங்கிய பிரபல நடிகர்... வைரலாகும் புகைப்படம்!

Gossip Today Hollywood Movies Viral Photos
By Sumathi Jul 26, 2022 05:48 AM GMT
Report

ஹனிமூனுக்கு சென்ற இடத்தில் சொகுசு கப்பலில் இருந்த பிரபல நடிகர் அசந்து தூங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் வெளியாகி கேலிக்கு உள்ளாகி வருகிறது.

ஜெனிபர் லோபஸ்

ஹாலிவுட் முன்னணி நடிகையான 53 வயதாகும் ஜெனிபர் லோபஸ் நடிகர், நடன கலைஞர் மற்றும் பாடகர் என 3 பேரை திருமணம் செய்து விவாகரத்து செய்து விட்டார். இவருக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

ஹனிமூன் சென்ற இடத்தில் அசந்து தூங்கிய பிரபல நடிகர்... வைரலாகும் புகைப்படம்! | Actor Slept In Honey Moon Photo Became Troll

முன்னதாக, ஜெனிபர் லோபஸ் அவரை விட 4 வயது குறைந்த, நடிகர் பென் அப்லெக் என்பவரை முதன்முறையாக 18 ஆண்டுகளுக்கு முன் காதலித்து, நிச்சயம் செய்தார். ஆனால் இந்த நிச்சயதார்த்தம் திருமணத்தில் முடியவில்லை.

ஹனிமூனில் தூக்கம்

இந்நிலையில், மீண்டும் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. நடிகர் பென் அப்லெக்கிற்கு 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது திருமணம் முடித்துள்ள பென் மற்றும் ஜெனிபர் லோபஸ், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் செய்னி ஆற்றில் சுற்றுலா கப்பல் ஒன்றில் தேனிலவு கொண்டாட சென்றுள்ளனர்.

ஹனிமூன் சென்ற இடத்தில் அசந்து தூங்கிய பிரபல நடிகர்... வைரலாகும் புகைப்படம்! | Actor Slept In Honey Moon Photo Became Troll

சென்ற இடத்தில் நடிகர் பென் கப்பலிலேயே ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி, அசந்து தூங்குகிறார். இதுகுறித்த பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இதனை பார்த்த பலரும் பலவித விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். தூங்குவதற்கா சொகுசு கப்பலுக்கு பென் வந்தார் என கிண்டல் செய்து வருகின்றனர்.