டாக்டர் பட வெற்றியால் சம்பளத்தை உயர்த்திய நடிகர் சிவகார்த்திகேயன் - எவ்வளவு கோடி தெரியுமா?

actor Sivakarthikeyan salary increased
By Anupriyamkumaresan Nov 07, 2021 08:36 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராகியுள்ளார், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. அதன்படி டாக்டர் திரைப்படம் உலகமுழுவதும் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

டாக்டர் பட வெற்றியால் சம்பளத்தை உயர்த்திய நடிகர் சிவகார்த்திகேயன் - எவ்வளவு கோடி தெரியுமா? | Actor Sivakarthikeyan Salary Increased

இப்படத்தால் சிவகார்த்திகேயன் முதன்முறையாக 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளார். இந்நிலையில் டாக்டர் படம் பிரமாண்ட வெற்றியடைந்துள்ளதால் சிவகார்த்திகேயன் அவரது சம்பளத்தை 30 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.