புனீத் ராஜ்குமாரின் சமாதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சிவகார்த்திகேயன் - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
நடிகர் சிவகார்த்திகேயன் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். சமீபத்தில் பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருந்தார்.
அவருடைய மறைவு நாட்டில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தியத் திரைத்துறை பிரபலங்கள் அனைவரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
அவரது உடல் பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் பொதுமக்கள், ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. லட்சணக்கணக்கானோர் கலந்துகொண்டு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
புனீத் ராஜ்குமாரின் உடல் அவரது தந்தை, தாய் அடக்கம் செய்யப்பட்ட ஸ்ரீ கனடிர்வா ஸ்டுடியோ அருகேயே நடிகர் புனித்தின் உடலும் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பெங்களூரில் உள்ள புனீத் ராஜ்குமார் சமாதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.