தன் அன்பு மகனுக்கு பெயர் வைத்த நடிகர் சிவகார்த்திகேயன்.. என்ன பெயர் தெரியுமா?

aarthi aradhana gugan das sivakarthikayan
By Irumporai Aug 03, 2021 12:31 PM GMT
Report

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவருடைய மனைவியின் பெயர் ஆர்த்தி. சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா என்ற மகள் இருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த ஜூலை 12 அன்று சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினருக்கு மகன் பிறந்திருக்கிறார். இதனை முன்னிட்டு பலரும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்த  நிலையில் முதன் முறையாக தனது மகனை, அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

மேலும், தனது மகனுக்கு, தன் தந்தையின் பெயருடன் இணைத்து, குகன் தாஸ் என பெயர் வைத்துருக்கிறேன் என்று ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.