விஜயகாந்த் குடும்பத்தினருக்கு நடிகர் சிவகார்த்திகேயன், மனைவி ஆர்த்தி நேரில் ஆறுதல்!
விஜயகாந்த் இல்லத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் சென்று ஆறுதல் கூறினார்.
விஜயகாந்த் மறைவு
தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த 28-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனையடுத்து விஜயகாந்த் உயிரிழந்த அன்று வரமுடியாத ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அவரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் ஆறுதல்
நேற்று வெளிநாட்டிலிருந்து திரும்பிய நடிகர் சூர்யா நினைவிடத்திற்கு வந்து தேம்பி அழுதபடி அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் இன்று விஜயகாந்த் இல்லத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் சென்றிருந்தார்.

பின்னர் அவரின் குடும்பத்தினருக்கு சிவகார்த்திகேயன் ஆறுதல் கூறினார். மேலும், அங்கு வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil