இப்போ அந்தமாரி யாரும் இல்ல; ஆனா அந்த நடிகைய சொல்லலாம் - நடிகர் சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan Tamil Cinema Alia Bhatt Tamil Actors Tamil Actress
By Jiyath Jan 07, 2024 03:00 PM GMT
Report

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு பிடித்த நடிகை குறித்து பேசியுள்ளார்.

சிவகார்த்திகேயன்

இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகரை சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத்சிங் நடிப்பில் அயலான் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்போ அந்தமாரி யாரும் இல்ல; ஆனா அந்த நடிகைய சொல்லலாம் - நடிகர் சிவகார்த்திகேயன்! | Actor Sivakarthikeyan About His Favourite Actress

மேலும், யோகிபாபு, கருணாகரன், பானுபிரியா, பால சரவணன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் அயலான் திரைப்படத்தில் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வரும் 12ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பிடித்த நடிகை

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், தன்னைப்பற்றி கூகுளில் அதிகம் தேடப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இப்போ அந்தமாரி யாரும் இல்ல; ஆனா அந்த நடிகைய சொல்லலாம் - நடிகர் சிவகார்த்திகேயன்! | Actor Sivakarthikeyan About His Favourite Actress

அதில், சிவகார்த்திகேயனின் க்ரஷ் யார்? என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது. அதற்கு பதிலளித்த அவர் "இப்போ எனக்கு அந்தமாரி க்ரிஷ் யாரும் இல்ல. ஃபேவரைட் நடிகைனா ஆலியா பட் சொல்லலாம். ஆனால் க்ரஷ்னு சொல்லத் தோணல" என்று பதிலளித்துள்ளார்.