கதாபாத்திரங்களுக்கு உயிர் ஊட்டியவர்! நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 20வது நினைவு தினம்!
நடிப்பு என்றாலே சினிமாவில் முதலில் நினைவுக்கு வருவது சிவாஜி கணேசன் தான். அவரது நினைவு நாளில் பிரபலங்கள் பலரும் உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் நடிப்புக்கு என்று தனி இலக்கணம் வகுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவரது 20ஆவது நினைவு தினம் இன்று. அவர் இந்த உலகத்தை விட்டு மறைந்தாலும் அவரது திரைப்படங்கள் மூலம் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
ஆயிரம் நடிகர்கள் வந்தாலும், சென்றாலும் நடிகர் திலகத்திற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் ஜூலை 21ம் 2001ம் ஆம் ஆண்டில், தன்னுடைய 74 வயதில் இயற்கை எய்தினார்.
இவரது மறைவு திரையுலகினர் பலரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கியது. தமிழ் சினிமாவை சிவாஜிக்கு முன் சிவாஜிக்குப் பின் என பிரித்து பார்க்கும் அளவிற்கு தன்னுடைய நடிப்பால் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப் போட்டவர்.
சிவாஜி கணேசன் தன்னுடைய நடிப்பின் மூலமாக பல கதாபாத்திரங்களுக்கு உயிர் ஊட்டியவர். அவர் கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், கொடிகாத்த குமரன், பகத் சிங், ராஜராஜ சோழன் போன்ற எண்ணற்ற வரலாற்று படங்களில் அவர் அந்த கதாபாத்திரங்களை நம் கண்முன்னே தத்ரூபமாக கொண்டு வந்திருக்கிறார்.
அந்த கதாபாத்திரங்களை நாம் நேரில் பார்த்ததில்லை என்றாலும் அவற்றை தத்ரூபமாக திரையில் தன்னுடைய நடிப்பால் கொண்டு வந்திருப்பார் சிவாஜி கணேசன்.
280க்கும் மேற்பட்ட படங்களில் தன்னிகரில்லா நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சிவாஜி கணேசன். அவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது பல்வேறு நடிகர்களின் கனவாகவும் இருந்தது. அவருடன் நடிப்பதை மிகப் பெரிய பெருமையாக கருதிய நடிகர்கள் பலர் உள்ளனர்.
இன்று இவரது வாரிசுகளான நடிகர் பிரபு, ராம்குமார் மற்றும் அவர்களை தொடர்ந்து பேரன் விக்ரம் பிரபு என அனைவரும் அவரின் பேர் சொல்ல நிறைய திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.
சிவாஜி கணேசன் ஒரு நிமிடத்தில் எண்ணிகரற்ற பாவங்களை முகத்தில் காட்டுவதில் வல்லவர். நடிப்பில் இவரை போல் சிறந்தவர் யாருமே இல்லை என்ற பெயரோடு மறைந்தவர்.
கடைசியாக 1999-ம் ஆண்டு வெளிவந்த பூப்பறிக்க வருகிறோம் திரைப்படத்தில், நடித்துள்ளார். இதற்கு முன்னதாக அதே 1999-ம் ஆண்டு வெளிவந்த ஹிட் திரைப்படமான படையப்பா திரைப்படத்தில் தந்தையாக நடித்து தன் திறமையை அந்த வயதிலும் வெளிப்படுத்தியவர்.
சாகும் வரையிலும் தன் நடிப்பால் உயர்ந்த அந்த மாமேதை நடிப்பு இருக்கும் வரை, ஒவ்வொரு நடிகர்கள், நடிகைகளாய் என்றும் வாழ்ந்து வருவார். இவரது நினைவு நாளில், ஏராளமான பிரபலங்கள் இன்று சிவாஜி கணேசனின் நினைவலைகளை நினைவு கூர்ந்துள்ளனர்.
அந்த வகையில், சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான விக்ரம் பிரபு சிவாஜியின் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு தன்னுடைய வணக்கத்தை தெரிவித்துள்ளார்.
20th anniversary ?❤️❤️#SivajiGanesan pic.twitter.com/WoyIXLVsWL
— Vikram Prabhu (@iamVikramPrabhu) July 20, 2021