வெறித்தனமாக எடையை குறைத்த நடிகர் சிம்பு - ரசிகர்கள் ஆச்சரியம்!
நடிகர் சிம்பு “வெந்து தணிந்தது காடு”திரைப்படத்திற்காக 15 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு.
Another surprise! ?
— SilambarasanTR 360° (@STR_360) August 13, 2021
There is one more Muscular look from Thalaivan @SilambarasanTR_ for the film #VendhuThanindhathuKaadu ???#VTK #SilambarasanTR pic.twitter.com/uoXaJBmciH
இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 6- ஆம் தேதி வெளியானது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மிகவும் இளமையான தோற்றத்தில் வித்தியாசமாக சிம்பு இருந்தார்.

இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக திருச்செந்தூரில் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இந்த படத்திற்காக நடிகர் சிம்பு 15 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.