அழகாக மாறிய நடிகர் சிம்பு.. சம்பளத்தை இரு மடங்காக உயர்த்திய STR! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் புதிய டிரண்டுகளை அறிமுகப்படுத்தியவர் தான் நடிகர் சிம்பு. நாயகனாக நடிக்க ஆரம்பித்த சில படங்களிலேயே பெரிய நடிகர்களுக்கு இணையாக வரவேற்பு பெற்றார்.

நடிப்பு மட்டுமில்லாது இயக்கம், பாடுவது, பாடல் எழுதுவது, நடனம் ஆடுவது என பல விஷயங்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இடையில் பல பிரச்சனைகள், சர்ச்சைகளை சந்தித்த STR இப்போது எடையெல்லாம் குறைத்து புதிய அவதாரம் எடுத்து புது வாழ்க்கையை தொடங்கி நடித்து வருகிறார்.
மீண்டும் வல்லவன் சிம்புவாக, ஸ்லிம் லுக்கில் மாறிய அவருக்கு, அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டே உள்ளது. இதுவரை ரூ. 5 கோடி வரை சம்பளம் பெற்ற அவர் தற்போது ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

இவரின் இந்த தோற்றத்தை கண்டு உற்சாகமடைந்த இவரது ரசிகர்கள், இவரை வெகுவாக கொண்டாடி வருகிறார்கள். சினிமாவில் கலக்கும் STRயின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 150 கோடிக்கு மேல் இருக்கும் என கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.