இவ்வளவு அழகாக மாறிய நடிகர் சிம்பு - ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
பல்வேறு விமர்சனங்களையும் தாண்டி, உடல் எடையை குறைத்து அழகாக மாறிய சிம்புவின் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வருகிறது.
சிறு வயது முதலே நடிப்பு, பேச்சு என பல் திறமை கொண்ட நடிகர் சிம்புவுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல் எடை கூடி, சிம்பு மிகவும் மாறுப்பட்டவராக தென்பட்டார்.

இந்த நிலையில் மீண்டும் 15 கிலோ எடையை குறைத்து வல்லவன் சிம்புவாக திரையுலகில் ரீ எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து இவர் நடித்த ஈஸ்வரன் படம் நல்ல வரவேற்பையே பெற்றது.
இந்த நிலையில் தற்போது இதே உடல் தோற்றத்துடன் மாநாடு, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் நடத்தி வருகிறார்.
Ready. Set. Go! ?#Atman #SilambarasanTR pic.twitter.com/gDqgzjWgqq
— Silambarasan TR (@SilambarasanTR_) August 18, 2021
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் தலைவனா இது என வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.