‘காக்கி சட்டை காக்கி பேண்ட், கையில கர்ச்சீஃப், ஸ்டைலோ ஸ்டைலுங்க’ - இணையத்தை கலக்கும் சிம்புவின் ஆட்டோக்காரர் கெட்-அப்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அவர் கெளதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
வெந்து தணிந்தது காடு படத்தை முடித்துவிட்டு பத்து தல படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தான் நடிகர் சிம்பு ஆட்டோக்காரர் கெட்-அப்பில் இருக்கும் வீடியோ ஒன்று நேற்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவ தொடங்கியது.
இதை கண்டு உற்சாகமடைந்த ரசிகர்கள் சிம்புவின் அடுத்த படத்திற்கான கெட் அப் தான் இது என்று கூறி இணையத்தை தெறிக்கவிட்டு வந்தனர்.
Lastest viral ad shoot video of @SilambarasanTR_ #Atman #SilambarasanTR pic.twitter.com/vxVtAylJQW
— Karthik Ravivarma (@Karthikravivarm) April 11, 2022
ஆனால் தற்போது அந்த கெட்-அப் குறித்த உண்மை தகவல் வெளியாகியுள்ளது, அதன்படி சிம்புவின் ஆட்டோக்காரர் கெட்டப் படத்திற்காக இல்லையாம், விளம்பரத்திற்காகவாம்.
ஒரு புதிய விளம்பரத்தில் சிம்பு ஆட்டோக்காரராக நடிக்கிறாராம். இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவில் சிம்பு காக்கி சட்டை பேண்ட் அணிந்துக்கொண்டு மிகவும் மாஸாக கையில் கர்ச்சீப் வைத்துக்கொண்டு ஆட்டோவின் உள்ளே செல்வதும், வெளியே வருவதும் போல காணப்படுகிறார்.