தீபாவளிக்கு ரிலீசாகும் மாநாடு - உற்சாக கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்

release str diwali maanadu actor silambarasan
By Anupriyamkumaresan Sep 11, 2021 06:33 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சினிமா
Report

வரும் நவம்பர் 4 தீபாவளி அன்று நடிகர் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் திரைக்கு வர உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் 'மாநாடு'.

இந்த திரைப்படத்திற்காக நீண்ட காலமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். அண்மையில் இந்தப்படத்தின் 'மெர்ஸைலா' என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. இந்தப் பாடலை யுவனும், அவரது சகோதரி பவதாரணியும் இணைந்து பாடியுள்ளனர்.

தீபாவளிக்கு ரிலீசாகும் மாநாடு - உற்சாக கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள் | Actor Simbu Movie Manadu Diwali Release Str Tweet

இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை யுவனின் யு1 ரெக்கார்ட்ஸ் ஆடியோ பெற்றுள்ளது. இந்நிலையில் மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே அஜித்தின் 'வலிமை' மற்றும் ரஜினியின் 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், உடன் மாநாடு இணைந்திருப்பது இந்த தீபாவளி படு ஜோராக்கியுள்ளது.