நடிகர் விஷாலை வெளுத்து வாங்கிய சிம்புவின் அம்மா- ரசிகர்கள் அதிர்ச்சி
கெளதம் மேனன் இயக்கத்திலும், ஐசரி கணேஷ் தயாரிப்பிலும் சிம்பு நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’திரைப்படம் ஆரம்பத்திலேயே பெரிய பஞ்சாயத்தை கூட்டி இருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம், கௌதம் மேனன் பிறந்தநாளில் இந்த படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த படத்திற்கு அப்போது ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்று தான் டைட்டில் வைத்தனர்.
ஆனால், இந்த டைட்டில் கொஞ்சம் ட்ரோல்களுக்கு உள்ளாகி இருந்தது.
இதனால் இந்த படத்தின் டைட்டிலை ‘வெந்து தணிந்த காடு’ என்று மாற்றி கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர்.
அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பின்னர் ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2 ‘ படம் எடுக்க திட்டமிடபட்டிருந்தது. அந்த படத்தை ‘ஆல் இன் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால், அந்த திரைப்படத்தின் பணிகள் துவங்குவதற்குள் ஐசரி கணேஷ் தயாரிப்பில் கெளதம் மேனன் – சிம்பு – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் ஒரு படம் உருவாக திட்டமிடபட்டுவிட்டது.

இதனால் ஜெயமோகனின் ‘அக்னி குஞ்சொன்று கண்டேன்’ என்ற கதையை படமாக்கும் உரிமையை வாங்கி அதற்கான பணிகளில் ஈடுபட்டார் கெளதம் மேனன்.
அந்த படம் தான் இந்த ‘வெந்து தணிந்த காடு’. இப்படி ஒரு நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தை திட்டமிட்டு இருந்த ‘ஆல் இன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தன்னுடைய நிறுவனத்திற்கு படம் பண்ணுவதாக பேசிவிட்டு, இப்போது இந்தக் கூட்டணி வேறொரு தயாரிப்பு நிறுவனத்திற்கு படம் பண்ணுகிறார்கள் என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க ‘AAA’ படத்தின் நஷ்ட ஈட்டை சிம்பு கொடுக்கவேண்டும். அதை கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்கிறார்” என்று தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இதனால் இந்த ‘வெந்து தணிந்த காடு’ படத்திற்கு ஃபெப்ஸி, ரெட் கார்ட் கொடுக்கப்பட்டதாக அறிவித்தது.

இருப்பினும் ஃபெப்ஸி அமைப்பு மற்றும் ஐசரி கணேஷ் ஆதரவால் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கி இருக்கிறது.
இந்த நிலையில் சிம்புவின் அம்மா உஷா, இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார். அதில் அணைத்து பிரச்சனைக்கும் விஷால் தான் காரணம் என்றும், விஷால் தயாரிப்பாளர் ட்ரஸ்ட்ல இருந்த 7 கோடி பணத்தையும், உறுப்பினர்களோட பணம் 7 கோடியையும் பல விதத்துல விரயம் பண்ணி காலி பண்ணிட்டார் என்று அதிரடி குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார்.

மேலும், பொதுக்குழு கேட்ட கேள்விங்களுக்கும் பதில் சொல்லாம, கணக்கு காட்டமுடியாம ஓடிப் போய்ட்டார்’னு சொல்லித்தான் இப்ப இருக்கிற தயாரிப்பாளர் சங்கத் தலைமை ஜெயிச்சாங்க. விஷாலுக்கு எந்த ரெட் கார்டும் கொடுக்காம, விஷால் போட்ட தீர்மானத்தை வச்சு, சிலம்பரசனுக்கு ரெட் கார்ட் கொடுக்கணும்னு நினைக்கிறாங்க என்று தெரிவித்துள்ளார்.
நடிகை உஷாவின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.