புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்: நெகிழ்ச்சியில் ரசிகர்கள்
நடிகர் சிலம்பரசன் குழந்தைகளேடு குழந்தையாக மாறி நடனமாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
உலக ரோஜா தினத்தை முன்னிட்டு புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு கலந்துகொண்டார். அவர்களுடன் நீண்ட நேரம் விளையாடி ஆடி பாடி அவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார்.
இதன் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் வைரலாகி வருவதுடன் சிம்பு ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். இதேவேளை, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி உலக ரோஜா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் அனுசரணையாகவும் இருப்பதற்காக இந்த உலக ரோஜா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தற்போது சிம்பு அடுத்தடுத்து பிசியாக படங்களில் நடித்து வந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ரசிகர்களுக்கு மகிழச்சியியை ஏற்படுத்தியுள்ளது.
@SilambarasanTR_ Dancing With Children's ❤??#SilambarasanTR #Maanaadupic.twitter.com/jRZQrNgKy9
— ????? ???????™ (@Simbu_Shadows) September 22, 2021