நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் விரைவில் ஆலோசனை கூட்டம் - நடிகர் சிம்பு அறிக்கை

Silambarasan Hariharan Gajendran
By Anupriyamkumaresan Oct 01, 2021 06:41 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

நற்பணி மன்றத்தின் பணிகளை விரிவுபடுத்த உள்ளதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். 

இது குறித்து சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதிப்பும் பேரன்புகொண்ட என் இரத்தத்தின் இரத்தமான, என் உறவுகளே வணக்கம், நீண்ட நாளாக இயற்கையின் செயல்களால், உங்களிடம் நேரடியாக உறவாடாமல், உங்களின் தொலைபேசி வாயிலாக உறவு கொண்டோம்.

நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் விரைவில் ஆலோசனை கூட்டம் - நடிகர் சிம்பு அறிக்கை | Actor Simbu Charity Forum Statement

மேலும் இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, மருத்துவ அணி, தகவல் தொழில் நுட்ப பிரிவு அணி, கலை இலக்கிய அணியின் மூலம் மன்றத்தின் பணிகளை விரிவுபடுத்த உள்ளோம்.

ஆதலால் நம் நற்பணி மன்றத்தின் அகில இந்திய தலைவர் T.வாசு அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது.

ஆகையால் மாநில, மாவட்ட, வட்ட, பொறுப்பாளர்கள், நமது தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கலந்து கொள்ள பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.