சிம்புவா இது? செம லுக்கில் மீண்டும் விளம்பரத்தில் நடிக்க வந்த சிம்பு - ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகர் சிம்பு நடித்த விளம்பரத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு தொடர்ந்து தனது திரைப்படங்களை வேகமாக நடித்து முடித்து வருகிறார்.
அந்த வகையில் மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு தற்போது இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து சிம்பு இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிம்பு தொடர்ந்து அவரின் ரசிகர்களுக்கு தொடர்ந்து பல சர்ப்ரைஸ் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.
அந்த வகையில் சிம்பு இணைய வழி ஆடை வர்த்தக நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் தற்போது நடித்துள்ளார். செம ஸ்டைலிஷ் உடையில் அவர் நடித்துள்ள அந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
Thrilled to be a part of the Myntra style fam. It’s time to forget the rest of fashion and shop the best of fashion with Myntra, India's Fashion Expert ???#SilambarasanTR #Myntra https://t.co/VPnqhPKYGc pic.twitter.com/MA3RFTR4kg
— Silambarasan TR (@SilambarasanTR_) September 3, 2021