அழகாக மாறியதும் சிம்புக்கு இவ்வளவு ரசிகர்கள் பட்டாளமா? சாதனை படைத்த சிம்புவின் சமையல் வீடியோ!
video
actor
viral
silambarasan
By Anupriyamkumaresan
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் எடையை குறைத்து பழைய வல்லவன் சிம்புவாக உருவெடுத்தார்.

இதனை தொடர்ந்து இவருக்கு தற்போது திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சிம்பு கிளீன் ஷவ் செய்து தனது புதிய கெட்டப்-பில் சமையை செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோ பதிவை தற்போது 10 மில்லியனுக்கு அதிகமானோர் பார்த்துள்ளனர்.

ஒரே வாரத்தில் ஒரு இந்திய நடிகரின் பதிவை இத்தனை மில்லியன் பேர் பார்த்துள்ளது இதுவே முதல்முறையாகும். நடிகர் சிம்பு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.