கல்யாணம் ஆகி 5 மாசம் தான் ஆச்சு... அதுக்குள்ள நிறைமாத கர்ப்பிணியான பிரபல நடிகை

By Petchi Avudaiappan May 13, 2022 10:32 AM GMT
Report

சீரியல் நடிகை ஸ்ரேயா சித்து நிறை மாத கர்ப்பம் போல் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருமணம் எனும் சீரியலில் ஜோடியாக நடித்த பிரபலங்கள் ஸ்ரேயா, சித்து இருவரும் காதலித்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து தங்கள் வாழ்வில் நடக்கும் சந்தோஷ நிகழ்வுகளை இருவரும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து Sidhu & Shreya எனும் யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார்கள். அதில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அந்த வீடியோவில் ஸ்ரேயா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதை பார்த்த சித்து ஆச்சரியப்பட்டு  கீழே கமென்ட்டில் ரீல் மொமென்ட் ரியல் ஆனா எப்படி இருக்கும்?  என தெரிவித்துள்ளார். 

இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் கர்ப்பமாவது இயல்பான ஒன்று தான்... ஆனால் 5 மாதத்தில் நிறைமாதம் கர்ப்பம் என்பது உங்களுக்கே ஓவரா தெரியவில்லை என தெரிவித்து வருகின்றனர்.