முக ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறிய நடிகர் சித்தார்த்! என்ன சொல்லியிருக்கிறார்?

1 week ago

தமிழகத்துக்கு நீங்கள் நல் ஆட்சியை கொண்டு வருவீர்கள் என தான் நம்புவதாக டுவிட் செய்துள்ளார் நடிகர் சித்தார்த்.

இன்று காலை முதலே விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில், 150க்கு மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் திமுக-வின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது.

இதனையடுத்து அரசியல் பிரபலங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் முக ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த் வெளியிட்டுள்ள டுவிட்டில், ஜெயலலிதாவுக்குப் பிறகு நம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர். மகத்தான வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.

எங்கள் அனைவரின் நலனுக்கு நீங்கள் நல்ல ஆட்சியைக் கொண்டு வருவீர்கள் என நம்புகிறேன். எதிர்பார்ப்புகளோடும் கேள்விகளோடும் உங்களைப் பார்க்கிறோம். வாழ்க தமிழ் என தெரிவித்துள்ளார்.


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்