‘‘பொய் சொன்னால் அறை விழும்’’ யோகி ஆதித்யநாத்துக்கு நடிகர் சித்தார்த் எச்சரிக்கை

covid19 india siddharth yogiadityanath
By Irumporai Apr 28, 2021 04:01 AM GMT
Report

மனிதராக இருந்தாலும், சாமியாராக இருந்தாலும் பொய் சொன்னால் அறை விழும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நடிகர் சித்தார்த் பதிலடி கொடுத்துள்ளார்.

கொரோனா தொற்றால்  உத்தரப்பிரதேச மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில்  பலரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆக்சிஜன் இல்லை என்று பொய் சொல்லும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனகூறியிருந்தார்.

இதற்கு நடிகர் சித்தார்த்  தனது ட்வீட்டர் பதிவு மூலம் பதிலடி கொடுத்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில்:

மனிதராக இருந்தாலும், சாமியாராக இருந்தாலும், தலைவராக இருந்தாலும், பொய் சொன்னால் அறை விழும்'' என கடுமையாக தெரிவித்துள்ளார்.