பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி
பாலிவுட் நடிகரும், பிக்பாஸ் 13-இன் வெற்றியாளருமான சித்தார்த் சுக்லா மாரடைப்பு காரணமாக மும்பையில் காலமானார்.
நடிகர் சித்தார்த் சுக்லா அம்மா மற்றும் தன்னுடைய இரு சகோதரிகளுடன் சித்தார்த் வசித்து வந்தார். சமீபத்தில் நடந்த பிக் பாஸ் மற்றும் டான்ஸ் டிவானே போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். எந்த அளவுக்கு பிரபலமடைந்து புகழ்பெற்றாரோ அந்த அளவுக்கு பல விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் உள்ளானவர் சித்தார்த்.
காதல் விவகாரங்கள் போன்ற விஷயங்களில் சிக்கினார் சித்தார்த். 1980ம் ஆண்டு டிசம்பர் 12ல் பிறந்த சித்தார்த் குடும்பத்தின் பூர்வீகம் உத்தரபிரதேசம் ஆகும். பள்ளிப்படிப்பை ஷேவியர் பள்ளியில் முடித்த சித்தார்த், இண்டீரியர் டிசைனிங்கில் தன் கல்லூரி படிப்பை முடித்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Life is so unpredictable. Absolutely shocked to hear about Sidharth's passing. Devastating beyond words. My condolences to his family, friends and fans. Rest in peace my friend?? #SiddharthShukla pic.twitter.com/kRHL1EatYu
— Gautam Rode (@gautam_rode) September 2, 2021
சித்தார்த்தின் மறைவுக்கு இந்திய திரையுலகமே அஞ்சலி செலுத்தி வருகிறது. அவரது ரசிகர்கள் பலரும் தங்களது வருத்தங்களை பதிவிட்டு வருகின்றனர்.