நடிகை அதிதி ராவுடன் காதல் - மனம் திறந்து பேசிய சித்தார்த்!
பிரபல நடிகரான சித்தார்த் நடிகை அதிதி ராவ் உடனான காதல் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
சித்தார்த்
பிரபல நடிகரான சித்தார்த் தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமானார்.
மேலும் இவர் பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
இவர் தற்போது பிரபல நடிகை அதிதி ராவ் ஹைதாரியை காதலிப்பதாக பல சர்ச்சைகள் எழுந்துள்ளது.
தொடர்ந்து, இவர்கள் எங்கு சென்றாலும் சேர்ந்து செல்வதனால் இவர்கள் காதலிக்கிறார்கள் என்று பலர் இணையத்தில் வெளியிட்டார்கள்.
அனால் இவர்கள் இருவருமே இது குறித்து எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதேபோல் எந்த அதிகாரபூர்வமான செய்தியும் கூறவில்லை.
பேட்டி
இந்நிலையில், நடிகர் சித்தார்த், இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் உருவான டக்கர் படத்தில் நடித்துள்ளார்.
தற்போது இந்த படத்தின் புரொமோஷனுக்காக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அப்பொழுது இவரது ரசிகர் ஒருவர் மறைமுகமாக அவரிடம் கேள்வி எழுப்பினர். அதில் "உங்களுக்கும் அவங்களுக்கும் காதல்னு ஒரு செய்தி பரவுகிறது" என்று கூறினார்.
அதற்க்கு பதிலளித்த நடிகர், "நான் ரொம்ப ரொமான்டிக்கான ஆள். ரொம்ப சார்ட் ஹார். தனிமையா இருக்கக்கூடியவன். இந்த கேள்விக்கான பதில் என்னனா இப்போ என் இதயத்தில நிறைய காதல் உள்ளது.
அந்த காதல் அனைத்தும் சரியான இடத்தில் இருக்கு. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்" என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் அவர் காதலிப்பது தெரியவந்தது, ஆனால் அதிகாரபூர்வமாக அவரை காதலிப்பதாக அவர் குறிப்பிடவில்லை.