சினிமாவை விட்டு விலகும் பிரபல நடிகர் - சமூக வலைதளத்தில் பேட்டி வைரல்!

Siddharth
1 மாதம் முன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சித்தார்த் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் அறிமுகமாகி, தமிழ் தெலுங்கு இந்தி உள்பட பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

இவர் கடைசியாக தமிழில் அருவம், சிவப்பு மஞ்சல் பச்சை ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

சினிமாவை தவிர்த்து சித்தார்த் பெரும்பாலும் சமூக பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்த கருத்துக்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்துபவர்.

சினிமாவை விட்டு விலகும் பிரபல நடிகர் - சமூக வலைதளத்தில் பேட்டி வைரல்! | Actor Siddharth Plans To Leave Cinema Industry

அண்மையில் பொய் சொன்னால் முதல்வராக இருந்தாலும் கன்னத்தில் அறைவேன் என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை குறிப்பிட்டு சித்தார்த் பதிவிட்டிருந்தது இணையத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

அதனை தொடர்ந்து தனக்கு வந்த மிரட்டல்கள் குறித்தும் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிரங்கமாக பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கான சரியான கேரக்டர் கிடைக்கவில்லை என்றால் சினிமாவில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

மேலும், கடந்த சில வருடங்களாக சித்தார்த் நடித்த படங்கள் வெற்றி பெறாத நிலையில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து, சினிமாவில் இருந்து விலகி அவர் சொந்த தொழில் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. சித்தார்த் தற்போது மகாசமுத்திரம், சைத்தான் கே பச்சா, டக்கர் மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.