நடிகர் சித்தார்த் மரணம் - வெளியான வீடியோவால் நடிகர் அதிர்ச்சி!!

actor shock died siddharth
By Anupriyamkumaresan Jul 19, 2021 02:40 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in வதந்திகள்
Report

இறந்தவர்கள் பட்டியலில் தனது பெயர் இடம்பெற்று வெளியான வீடியோ குறித்து யூ டியூப்பில் நடிகர் சித்தார்த் புகார் அளித்துள்ளார்.

நடிகர் சித்தார்த் மரணம் - வெளியான வீடியோவால் நடிகர் அதிர்ச்சி!! | Actor Siddharth Died News Release Actor Shock

நடிகர், பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர் நடிகர் சித்தார்த். தனது முதல் படமான பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார்.

அதன்பின் இவர் நடித்த ஆயுத எழுத்து, 18, காதலில் சொதப்புவது எப்படி?, உதயம் என்.எச்.4, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் சித்தார்த் மரணம் - வெளியான வீடியோவால் நடிகர் அதிர்ச்சி!! | Actor Siddharth Died News Release Actor Shock

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சித்தார்த், அடிக்கடி பாஜக குறித்த விமர்சனங்களை ட்விட்டரில் எழுதுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இந்நிலையில் இளம் வயதில் உயிரிழந்த நட்சத்திரங்களின் பட்டியலில் சித்தார்த்தின் புகைப்படத்துடன் கூடிய பெயரும் இடம்பெற்றதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அந்த வீடியோ குறித்து யூடியூபிடம் புகாரளித்துள்ளார்.

ஆனால் வீடியோவில் எந்த பிரச்னையும் இல்லை என யூடியூப் நிறுவனம் அவருக்கு பதிலளித்துள்ளது. இதற்கு நடிகர் சித்தார்த், ”அட பாவி” என குறிப்பிட்டு அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.