ட்விட்டரில் பாஜகவை கழுவி கழுவி ஊற்றிய நடிகர் சித்தார்த் - சாக்கடையில் தான் மலரும் என ஆவேசம்

angry tweet actor siddharth bjp supporter
By Anupriyamkumaresan Sep 13, 2021 10:42 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

பாஜக ஆதரவாளர் பதிவிட்ட பதிவு ஒன்றுக்கு நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜகவை கழுவி ஊற்றியுள்ளார்.

நேற்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு பயத்தால் சேலத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் கொந்தளித்த பலரும் தங்களது ஆதகங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ட்விட்டரில் பாஜகவை கழுவி கழுவி ஊற்றிய நடிகர் சித்தார்த் - சாக்கடையில் தான் மலரும் என ஆவேசம் | Actor Siddharth Angryabout Bjp Supporter Tweet

அந்த வகையில் பாஜக ஆதரவாளரான செல்வக்குமார் என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சித்தார்த் பெயரை குறிப்பிட்டும், திமுகவின் வாக்குறுதிகளை குறிப்பிட்டும் ஐயா சித்தார்த் அவர்களே என்ன பண்ண போறீங்க என்று பதிவிட்டுள்ளார்.

இதனை கண்டு கொதித்தெழுந்த நடிகர் சித்தார்த், உனக்கு வேணும்னா நீ போய் கேளு என்றும் பாஜக சாக்கடையில் தான் மலரும் எனவும் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் ட்விட்டரையே டாய்லட் ஆக்கி வச்சிருக்கீங்களே என்றும் ஆவேசமாக பேசியுள்ளார். இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.