உள்ளாடையை கடவுள் அளவு எடுக்கிறார்..சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் பிரபல நடிகை
கடவுள் குறித்து சர்ச்சையாக பேசிய பிரபல நடிகை ஸ்வேதா திவாரி பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் அவர் மன்னிப்பு கோரியுள்ளார். \
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற ஸ்டாப்பர் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடரின் ப்ரமோஷன் நிகழ்ச்சி மத்திய பிரதேச மாநிலம் போபலில் நடைபெற்றது.
படக்குழுவினர் அனைவரும் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், நடிகை ஸ்வேதா திவாரியும் கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், கடவுள் என் ப்ராவை அளவிடுகிறார் என்று கூறியுள்ளார்.
வரலாற்று தொடரான மகாபாரதம் தொடரில் கிருஷ்ணராக நடிக்கும், நடிகர் சௌரப் ஜெய்ன், இந்த தொடரில் மாடல்களுக்கு ப்ரா பொருத்தும் வேடத்தில் நடித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதனை வைத்துதான் நடிகை ஸ்வேதா திவாரி மறைமகமாக அவ்வாறு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக பரவி வரும் நிலையில், பலரும் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை ஸ்வேதா திவாரியின் இந்த பேச்சு குறித்து விசாணை நடத்தி 24 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று, மத்தியபிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா போபல் மாநகர காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து நடிகை ஸ்வேதா திவாரி மன்னிப்பு கோரியுள்ளார்.எனது பேச்சு மக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டதை நான் புரிந்து கொண்டேன்.
எனது வார்த்தைகள் அல்லது செயல்கள் யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமாக இருந்ததில்லை என்னுடைய பேச்சுக்கு நான் தாழ்மையுடன் மன்னிப்பு
கேட்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.