சொகுசு கப்பலில் நடந்த போதை பார்ட்டி - நடிகர் ஷாருக்கான் மகன் அதிரடி கைது!

arrest Shah Rukh Khan Aryan Khan
By Anupriyamkumaresan Oct 03, 2021 11:14 AM GMT
Report

நடுக்கடலில் கப்பலில் போதை பார்ட்டியில் கலந்து கொண்ட பிரபல இந்தி நடிகரின் மகன் ஆர்யன் கானை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மும்பையிலிருந்து நேற்று மதியம் 'எம்பிரஸ்' என்ற சொகுசுக் கப்பல், கோவாவுக்குச் சுற்றுலாப் பயணிகளுடன் மூன்று நாள் பயணத்தைத் தொடங்கியது.

இந்தக் கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்தி பார்டி நடப்பதாகப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

சொகுசு கப்பலில் நடந்த போதை பார்ட்டி - நடிகர் ஷாருக்கான் மகன் அதிரடி கைது! | Actor Sharukhan Son Aryankhan Arrest For Party

பின்னர், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலிஸாரும் இந்த கப்பலில் ரகசியமாகப் பயணம் மேற்கொண்டனர். கப்பல் நடுக்கலை நெருக்கியபோது பயணிகளில் சிலர் தடை செய்யப்பட்ட கொக்கைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவதை அதிகாரிகள் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து போலிஸார் இவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் பலரும் சினிமா, ஃபேஷன் துறைகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. மேலும் இந்த பார்டியில் கலந்து கொண்டவர்களில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் இருந்துள்ளார்.

சொகுசு கப்பலில் நடந்த போதை பார்ட்டி - நடிகர் ஷாருக்கான் மகன் அதிரடி கைது! | Actor Sharukhan Son Aryankhan Arrest For Party

இதனை தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்கு பிறகு பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை அதிரடியாக போலீசார் கைது செய்தனர்.