ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை அக்.7 வரை விசாரிக்க அனுமதி - ரசிகர்கள் அதிர்ச்சி

son arrest aryan khan actor shah rukh khan polce custody
By Anupriyamkumaresan Oct 04, 2021 12:42 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை அக்.7 வரை விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நடுக்கடலில் கப்பலில் போதை பார்ட்டியில் கலந்து கொண்ட பிரபல இந்தி நடிகரின் மகன் ஆர்யன் கானை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மும்பையிலிருந்து நேற்று மதியம் 'எம்பிரஸ்' என்ற சொகுசுக் கப்பல், கோவாவுக்குச் சுற்றுலாப் பயணிகளுடன் மூன்று நாள் பயணத்தைத் தொடங்கியது. இந்தக் கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்தி பார்டி நடப்பதாகப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை அக்.7 வரை விசாரிக்க அனுமதி - ரசிகர்கள் அதிர்ச்சி | Actor Sharukhan Son Aryankhan 7 Days Policecustody

பின்னர், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரும் இந்த கப்பலில் ரகசியமாகப் பயணம் மேற்கொண்டனர். கப்பல் நடுக்கலை நெருக்கியபோது பயணிகளில் சிலர் தடை செய்யப்பட்ட கொக்கைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவதை அதிகாரிகள் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து போலீசார் இவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் பலரும் சினிமா, ஃபேஷன் துறைகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

மேலும் இந்த பார்டியில் கலந்து கொண்டவர்களில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்கு பிறகு பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை அக்.7 வரை விசாரிக்க அனுமதி - ரசிகர்கள் அதிர்ச்சி | Actor Sharukhan Son Aryankhan 7 Days Policecustody

இந்த நிலையில், நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், அக்.7 வரை ஆர்யன் கானை காவலில் விசாரிக்க மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளனர்.