நடிகை ஷாலு ஷம்முவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்க ஹேக்கர்ஸ் முயற்சி..!
நடிகை ஷாலு ஷம்முவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்க ஹேக்கர்ஸ் முயற்சித்ததாக அவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகை ஷாலு ஷம்முவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 6.5 லட்சம் ஃபாலோயர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஷாலு ஷம்முவின் இன்ஸ்டா பக்கத்தை அவரது ஒப்பனையாளரின் கணக்கு மூலம் முடக்க முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.
அண்மைகாலமாக பேஸ்புக்கில் பிரபலங்களின் பெயர்களில் போலி கணக்குகளை தொடங்கி பணம் பறிக்கும் கும்பல் குறித்து தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். தற்போது புதிதாக பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை குறிவைத்து ஹேக்கர்கள் முடக்க முயற்சித்து வருகின்றனர்.
பிரபலங்களின் ஃபாலோயர்கள் அதிகமானோர் இருப்பதால் அவர்களின் பெயர்களில் போலி கணக்குகளை தொடங்கி ஏமாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் எச்சரிக்கையாக செயல்பட்டதால் ஷாலு ஷம்முவின் இன்ஸ்டாகிராம் பக்கம் தப்பித்துள்ளதாகவும் சைபர் கிரைம் போலீசார் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
Tamizha Tamizha: விதவை தாய்க்கு தலையில் பூ வைத்து அழகுபார்த்த மகன்! அரங்கமே கண்கலங்கிய தருணம் Manithan