மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் சமாதியில் எச்சில் துப்பினாரா நடிகர் ஷாருக் கான்? - கிளம்பும் புதிய சர்ச்சை

funeral controversy mumbai passed away shahrukh khan lata mangeshkar performs dua
By Swetha Subash Feb 07, 2022 06:45 AM GMT
Report

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கருக்கு தேசம் உணர்ச்சிப்பூர்வமான பிரியாவிடை வழங்கிய நிலையில், நடிகர் ஷாருக்கான் தகனம் செய்யும் இடத்தில் துவா செய்யும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் மறுபுறம் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

இந்தி திரையுலகின் மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவரின் உடல்நிலை சீரடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் சமாதியில் எச்சில் துப்பினாரா நடிகர் ஷாருக் கான்? - கிளம்பும் புதிய சர்ச்சை | Actor Shahrukh Khan Performs Dua In Lata Funeral

இந்நிலையில் நேற்று காலை திடீரென லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

அவரின் உயிரிழப்பு இந்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் அவரின் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் சினிமா பிரபலங்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்தனர்.

இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மற்றம் திரை பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடந்த தகன விழாவில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கான் மற்றும் அவரது மேலாளர் பூஜா தத்லானி லதா மங்கேஷ்கருக்கு இறுதி மரியாதையை செலுத்தினர்.

மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் சமாதியில் எச்சில் துப்பினாரா நடிகர் ஷாருக் கான்? - கிளம்பும் புதிய சர்ச்சை | Actor Shahrukh Khan Performs Dua In Lata Funeral

அப்போது ஷாருக் கான் துவாவில் தனது கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்துவிட்டு முககவசத்தை எடுத்துவிட்டு காற்றில் ஊதினார்.

மேலாளர் பூஜா தத்லானி தனது இரண்டு கைகளையும் இணைத்தப்படி பிரார்த்திக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்தியாவின் பன்முகத்தன்மையை இந்த புகைப்படம் அழகாக காட்டுகிறது என அரசியல்வாதிகள் முதல் எழுத்தாளர்கள் முதல் தலைவர்கள் வரை பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் சூப்பர் ஸ்டாரின் இந்த இறுதி அஞ்சலியை பாராட்டினர்.

மருபுறம் அவர் இஸ்லாமிய முறைப்படி இரு கரங்களையும் வேண்டி பிரார்த்தை செய்துவிட்டு, முககவசத்தை எடுத்துவிட்டு காற்றில் ஊதுவதை லதாவின் சிதை அருகில் அவர் எச்சில் துப்பியதாக மதசாயம் பூசியுள்ளனர்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் ஷாருக் கானை சிலர் கண்டித்து இப்படித்தான் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வீர்களா என்றும் இது என்ன கலாசாரம் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.