ஸ்ட்ரோக் அட்டாக்; ஷாருக்கானுக்கு என்னாச்சு - பரபரப்பில் திரையுலகம்!

Gujarat Shah Rukh Khan Bollywood
By Sumathi May 23, 2024 09:30 AM GMT
Report

 ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் ஷாருக்கான்

ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.

shahrukh khan

கொல்கத்தா, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய குவாலிஃபயர் போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அண்மையில் நடந்தது. இதனைக் காண ஷாருக்கான் அங்கு சென்றிருந்தார்.

இனி ஷாருக்கான் சென்னையில்தான்.. இதான் காரணமா?

இனி ஷாருக்கான் சென்னையில்தான்.. இதான் காரணமா?

 ஹீட் ஸ்ட்ரோக் 

அப்போது, 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நீரிழப்பு நோயால் அவதிப்பட்டார். இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. உடனே, அவரது மனைவி கௌரி கான் மருத்துவமனைக்கு விரைந்தார்.

மேலும், பலர் அங்கு கூடியதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், நடிகை ஜூஹி சாவ்லா மருத்துவமனைக்குச் சென்று அவரைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

தொடர்ந்து, சிகிச்சை முடிந்து ஷாருக்கான் வீடு திரும்பிய நிலையில், அடுத்து ஒரு வார காலத்திற்கு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.