நம்ம இன்னொரு குழந்தை பெத்துக்கலாம்.. அட்லீயின் மனைவியிடம் ஷாருக்கான் கலகல!
இயக்குனர் அட்லீயின் மனைவியிடம் நடிகர் ஷாருக்கான் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் அட்லீ
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான அட்லீ, இயக்குனர் ஷங்கரின் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். இவர் ஷங்கர் போலவே பிரம்மாண்ட பட்ஜெட்டில் படம் இயக்கக்கூடியவர். இவரது ராஜா ராணி படம் பெரிய ஹிட் கொடுத்தது, பின்னர் தொடர்ந்து, மெர்சல், பிகில் போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
மேலும், பல முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்து பிரபலமானார். இவர் தற்பொழுது பாலிவுட் நடிகரான ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியுள்ளார, இது வருகிற செப்டம்பர் மாதம் 7-ம் தேதி வெளியாக இருக்கிறது.
மேடையில் நடிகர்
இந்நிலையில், நேற்று ஜவான் படத்தின் இசை வெளியீட்டுவிழா பிரமாண்டமாக சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடந்தது. விழாவில் கலந்துகொண்டு பேசிய பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ப்ரியா நன்றி, நாம் இன்னொரு குழந்தையை பெற்றுக்கொள்வோம்.
நான் இல்லை. நீங்களும் அட்லீயும் சேர்ந்து. தற்போது நாம் நண்பர்களாகிவிட்டோம். நான் கோ ப்ரோடியூசராக சேர்ந்து கொள்கிறேன் என்று ஷாருக்கான் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.