விஜய்யின் அடுத்த படத்தில் இணையும் பிரபல நடிகர் - உற்சாகத்தில் ரசிகர்கள்
நடிகர் விஜய்யின் 66வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கவுள்ளதாகவும், பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவுள்ளதாகவும் சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்காலிகமாக “தளபதி 66” என பெயரிடப்பட்டுள்ளது.
இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனாவும், இசையமைப்பாளராக தமனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படம் குறித்து கடந்த சில நாட்களாக அதிகாரப்பூர்மற்ற தகவல்கள் வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
அந்த வகையில் தமிழில் பல படங்களில் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஷாம் விஜய்யின் 66வது படத்தில் இணைவதை உறுதி செய்துள்ளார். ஏற்கனவே விஜய் நடித்த குஷி படத்தில் ஷாம் துணை நடிகராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.