நடிகர் வடிவேலுவுக்கு மீண்டும் சிக்கல் - அதிர்ச்சியளித்த போஸ்டர்

Naaisekar actorsathish Actorvadivelu
By Petchi Avudaiappan Sep 16, 2021 11:53 PM GMT
Report

நடிகர் சதீஷின் திரைப்படத்திற்கு நாய் சேகர் என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளதால் நடிகர் வடிவேலு நடிக்கும் படத்தின் தலைப்புக்கு சிக்கல் எழுந்துள்ளது.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிஷோர் என்பவர் இயக்கத்தில் சதீஷ் புதிய திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதற்கான படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் அந்தத் திரைப்படத்திற்கு நாய் சேகர் என தலைப்பு வைத்துள்ளனர். இதனிடையே நடிகர் வடிவேலு ரீ-என்ட்ரி ஆகும் படத்திற்கும் நாய் சேகர் எனும் தலைப்பு வைத்துள்ளதாக சில தினங்களுக்கு முன் அவர் கூறியிருந்தார்.

இதன் தலைப்பை பெறுவது தொடர்பாக ஏ.ஜி.எஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில் நாய் சேகர் என்ற தலைப்பை ஏஜிஎஸ் நிறுவனம் சதீஷ் திரைப்படத்திற்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்து அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.இதனால் சினிமாவுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.