கருணாநிதி நினைவு நாணயம் குறித்து பேசிய நடிகர் சத்யராஜ் - வைரலாகும் வீடியோ!
பராசக்தி' படத்தின் காட்சியை மேற்கோள்காட்டி, இன்று நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா குறித்து நடிகர் சத்யராஜ் பேசியுள்ளார்.
கலைஞர்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வெளியிடுகிறார். இந்த நாணயத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை ஏழு மணியளவில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில் பராசக்தி' படத்தின் காட்சியை மேற்கோள்காட்டி, கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா குறித்து நடிகர் சத்யராஜ் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
SUCCESS
அதில் ,கலைஞர் மு.கருணாநிதி வசனம் எழுதிய பராசக்தி' படத்தில் சிவாஜியின் அறிமுக காட்சியில் அவர் ஒரு நாணயத்தை வைத்து கொண்டு SUCCESS.. SUCCESS.. என்று சிரிப்பார். இன்றைக்கு அது போல மு.கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை வைத்துக் கொண்டு தந்தை பெரியாரின் சமூகநீதிக்கு கிடைத்த SUCCESS..
பேரறிஞர் அண்ணாவின் கண்ணியம் கட்டுப்பாடு என்ற கோட்பாடுவிற்கு கிடைத்த SUCCESS.. SUCCESS.. 40/40 என்ற திமுகவிற்கு கிடைத்த SUCCESS..என்று தெரிவித்துள்ளார்.