ஏங்க எங்கள தலைல தூக்கி வெச்சு கொண்டாடுறீங்க : கொந்தளித்த நடிகர் சத்யராஜ்

Sathyaraj NEET
By Irumporai Sep 11, 2022 09:51 AM GMT
Report

நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள் என சத்யராஜ் தெரிவித்துள்ளார். உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி, மனதின் மையம் அறக்கட்டளை சார்பில் நேசம் என்ற தற்கொலை தடுப்பு மையம் ஈரோட்டில் தொடங்கப்பட்டது.

நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என நினைக்காதீர்கள்

இதில், சிறப்பு விருந்தினராக நடிகர் சத்தியராஜ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், தற்கொலைகள் குறித்து சத்தியராஜிடம் கேள்வி எழுப்பிய போது, நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என நினைக்காதீர்கள் என்றார்.

சமூகத்தில் மிகப்பெரிய தவறே நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பதுதான் என்ற அவர், நடிகர்களுக்கு சாப்பாடு போடுங்கள், தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

தலையில் தூக்கிவைத்து கொண்டாடாதீர்கள்

தொடர்ந்து பேசிய சத்யராஜ், நீட் தேர்வு கூடாது என்ற எண்ணத்தில் உள்ளவன் நான். முதல் தலைமுறை பட்டதாரிகளை நீட்தேர்வு பாதிக்கும் என்பதால் அது அவசியம் இல்லை.

டாக்டர், வக்கீல்கள் குழந்தைகளை அதே பதவிக்கு கொண்டு வருவது மிகவும் எளிது. ஆனால், படிக்க தெரியாத பெற்றோரின் குழந்தைகள், அவர்கள் படித்து குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வருவது மிகவும் முக்கியம் என்று தெரிவித்தார்.

ஏங்க எங்கள தலைல தூக்கி வெச்சு கொண்டாடுறீங்க :  கொந்தளித்த நடிகர் சத்யராஜ் | Actor Sathyaraj Outburst In Press Meet

மேலும் , நடிகர்கள் ஒன்றும் பெரியார், கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர் அல்ல போன்ற சிந்தனையாளர்களோ, அறிஞர்களோ அல்ல. எங்களுக்கு சாப்பாடு போடுங்கள், ஆனால் தலையில் தூக்கிவைத்து கொண்டாடாதீர்கள். அது தேவையில்லை என கூறினார்.