பிக்பாஸ் என்ன ஆபாச படமா? - பிரபல காமெடி நடிகர் சரமாரி கேள்வி

kamalhassan பிக்பாஸ் biggboss season5
By Petchi Avudaiappan Oct 24, 2021 12:11 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5-ல் கலந்து கொண்டுள்ள  சினிமா விமர்சகர் அபிஷேக் ராஜாவை பிரபல காமெடி நடிகர் சதீஷ் சரமாரியாக விமர்சித்துள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5-ல் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவரான சினிமா விமர்சகர் அபிஷேக் ராஜா வீட்டில் சண்டை, சச்சரவுகள் என பல சுவாரஸ்யமான சம்பவங்களை செய்து வந்தார். 

குறிப்பாக முந்தைய வாரங்களில் கமலிடன் தான் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியே பார்த்த்து இல்லை என்று தெரிவித்தார். ஆனால் அவர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த போது சில வருடங்களுக்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியையும், கமலையும் விமர்சித்த வீடியோ இணையத்தில் வைரலானது. 

பிக்பாஸ் என்ன ஆபாச படமா? - பிரபல காமெடி நடிகர் சரமாரி கேள்வி | Actor Sathish Criticize Abhisek Raja In Bbseason5

இதனிடையே கடந்த வார நிகழ்ச்சியில்  முந்தைய சீசன் போட்டியாளரான லாஸ்லியா, டாப்-5க்குள் வருவது, ப்ரோமோவில் இடம் பிடிப்பது என பல விஷயங்களை பேசியிருந்தார். இந்நிலையில் நேற்றைய எபிசோட்டின் போது அபிஷேக் ராவை கமல்ஹாசன் சரமாரியாக நோண்டினார். 

ஆனால் உறுதியாக தான் ஷோவை பார்க்கவே இல்லை என்றும்,உங்களின் ஆடைக்காக ப்ரோமோ மட்டுமே பார்ப்பேன் என்றும் விடாப்பிடியாக சொன்னார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர் சதீஷ், ஏன் யா பிக் பாஸ் என்ன பார்ன் மூவியா? பார்த்தத பார்த்தேன்னு ஒத்துக்கோயேன்.. அதுக்கு ஏன் இவ்ளோ பர்பாமன்சு  என ட்வீட் போட பலரும் இதனை வரவேற்றுள்ளனர். 

இதனிடையே இந்த வார வெளியேற்றுதல் பிரிவில் அபிஷேக் ராஜா வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.