பிரச்சனை செய்த கட்சிக்காரர் - சரத்குமாரிடம் நேருக்கு நேர் அஜித் கேட்ட 3 கேள்வி!

Jiyath
in பிரபலங்கள்Report this article
நடிகர் அஜித்குமார் குறித்து நடிகர் சரத்குமார் பேசியுள்ளார்.
நடிகர் சரத்குமார்
90ஸ் காலகட்டத்தில் தொடங்கி தற்போதுவரை சிறப்பான நடிகராக வலம் வருபவர் சரத்குமார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சரத்குமார், நடிகர் அஜித் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது "அஜித் ஒரு மிகச்சிறந்த மனிதர்.
அவருக்கு ஒரு சின்ன விஷயம் நெருடலான இருந்தா கூடா, உங்கள பார்க்க வரேன் சார் என்று சொல்லி நேரா வீட்டுக்கு வந்துருவாரு. 2,3 தடவை அப்படி வந்துருக்காரு.
விளக்கம் கொடுத்தேன்
ஒருமுறை யாரோ ஒருத்தர் பண்ணத.. என் கூட இருந்த ஒருத்தர். அரசியலில் என்ன விட்டு போயிட்டாரு . அவர் அஜித் படத்துக்கு எதிரா போராட்டம் நடத்தியிருக்காரு.
அஜித் உடனே "உங்க ஆள் தானே அப்படி பண்ணாரு. நீங்க தானே பண்ணீங்க. எல்லாரும் நீங்க இதுல சம்பந்தப்பட்டிருக்கீங்கனு சொன்னாங்க" என்று அஜித் என்கிட்ட கேட்டாரு.
அப்போ நான் சொன்னேன் "இல்ல அஜித் அவர் என்னோட கட்சியிலிருந்து எப்போதோ வெளியேறிவிட்டார். இந்தப் பிரச்னைக்கும் எனக்கும் சம்பந்தமில்ல என்று விளக்கம் கொடுத்தேன்" என்று சரத்குமார் பேசியுள்ளார்.