தமிழக பாஜக தலைவர் ஆகிறாரா சரத்குமார்?
actor sarath kumar to be tamilnadu bjp president: தமிழக பாஜகவின் புதிய மாநில தலைவராக சரத்குமாரை நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் ஆகிறாரா சரத்குமார்?
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பாஜக எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில், மத்திய அமைச்சர் எல்.முருகன் பதவியை ராஜினாமா செய்து மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்பியதால் அவர் மீண்டும் பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்படலாம் என்ற பேச்சுகள் எழுந்தது.
ஆனால், அவர் ஏற்கனவே ஒருமுறை மாநிலத் தலைவராக இருந்துள்ளார். பாஜகவில் ஏற்கெனவே மாநிலத் தலைவராகப் பணியாற்றியவர்களை மீண்டும் அதே பதவியில் அமர்த்துவது இல்லை.
இந்நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்து கொண்ட சரத்குமாருக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த விஜய் முதல்வராக உள்ளார், நடிகர் தனுஷ் அரசியல் வருவதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.
இந்த சூழலில், மக்களிடம் பரிச்சயமான ஒருவரான சரத்குமாரை மாநில தலைவராக்கினால் கட்சிப் பணிகளையும் தேர்தல் வியூகங்களையும் எளிதாகக் கொண்டு செல்ல முடியும் என பாஜக கருதுகிறது.
யாழ். மாவட்ட DCC கூட்டத்தில் சர்ச்சை - மாயமான முக்கிய அதிகாரிகள் - அம்பலப்படுத்திய அர்ச்சுனா எம்.பி IBC Tamil