Actor Sarath Babu Passed Away : பழம் பெரும் நடிகர் சரத்பாபு காலமானார்..!
பழம்பெரும் நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71.
சரத்பாபு காலமானார்
தமிழில் நாயகன், குணச்சித்திர வேடங்களில் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார்.

கிட்டத்தட்ட 50 வருடங்களாக திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் முள்ளும் மலரும், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை போன்ற பல படங்களில் நடித்தவர் சரத்பாபு. ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என தனக்கு கிடைக்கும் கதாப்பாத்திரங்கள் அனைத்திலும் முத்திரை பதித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் சரத்பாபு அண்மை நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
பிரித்தானியாவில் சிறப்புற நடைபெற்ற மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலை 150ஆவது ஆண்டு விழா! IBC Tamil
விடுதலைப் புலிகளின் தலைவர்களை உயிருடன் பிடித்திருந்தால் வடக்கில் மீண்டும் யுத்தம்: சரத் பொன்சேகா வாக்குமூலம் IBC Tamil