வடிவேலுவை அடிக்க பாய்ந்த காமெடி நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ்..!

Tamil Cinema Vadivelu
By Thahir May 01, 2023 01:21 PM GMT
Report

நடிகர் வடிவேலு என்னிடம் அவ்வளவாக வச்சிக்க மாட்டார் என காமெடி நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

வடிவேலுவின் மற்றொரு முகம் 

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக காலுான்றி வருபவர் வைகைப்புயல் என்று அழைக்கப்படும் வடிவேலு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்றளவும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

actor-sarapaambu-subburaj-to-beat-vadivelu

தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலுவை சுற்றிலும் சக காமெடி நடிகர்களான போண்டாமணி, பெஞ்சமின், முத்துக்காளை, சாரப்பாம்பு உள்ளிட்டோர் இருந்த நிலையில் வடிவேலுவின் காமெடி கை கொடுத்தது.

இந்த நிலையில் நடிகர் வடிவேலு தனது கூட இருக்கும் காமெடி நடிகர்கள் வளர்ந்து விடக்கூடாது என்று கருத்துவாராம். இதனால் பல நடிகர்கள் வடிவேலுவை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர்.

அடிக்க பாய்ந்த நடிகர் 

இந்த நிலையில் காமெடி நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில்,  ஆரம்பத்திலிருந்து விஜயகாந்தும் வடிவேலுவும் நல்ல நட்புடன் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தை வடிவேல் கண்டபடி விமர்சித்தார்.

actor-sarapaambu-subburaj-to-beat-vadivelu

அதிலிருந்து எனக்கு வடிவேலுவை எனக்கு பிடிக்காமல் போனது. இதுகுறித்து அடுத்த நாளே வடிவேலுவிடம் கேட்டு எச்சரித்தேன்.

கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் விஜயகாந்த் கையால் சாப்பிட்டிருக்கேன் என்னை போல் அவரால் நிறைய பேர் பலடைந்திருக்கிறார்கள்.

விஜயகாந்த் அவருடைய அறைக்கு வரும் போது செந்தில் ஒரு பக்கமும், ராவுத்தர் ஒரு பக்கமும் நான் ஒரு பக்கமும் படுத்திருப்போம்.

எங்களை தொந்தரவு செய்ய கூடாது என நினைத்து கொண்டு விஜயகாந்த் ஒரு துண்டை விரித்துக் கொண்டு தரையில் படுத்திருப்பார்.

தினமும் 3 வேளையும் கறி சோறுதான். அவர் என்ன சாப்பிடுகிறாரோ அதையே எங்களுக்கும் தருவார். இப்படிப்பட்ட மனுஷனை தப்பா பேசுனா சும்மா இருப்பேனா?

வடிவேலுவை அவர் வீட்டுக்கே போய் அடிக்கவே பாய்ந்துவிட்டேன். அப்போது மறைந்த எம்பி ஜே.கே ரித்தீஷ்தான் என்னை தடுத்து சமாதானம் செய்தார்.

வடிவேலு ஒரு கஞ்சன்

வடிவேலு ஒரு கஞ்சன், அவர் விஜயகாந்தை திட்டலாமா, அதுக்குத்தான் ஆண்டவன் வடிவேலுக்கு அந்த தண்டனை கொடுத்திருக்கான்.

actor-sarapaambu-subburaj-to-beat-vadivelu

வடிவேலு கூட நடித்த எல்லா காமெடியும் நான் உருவாக்கியது. சாரப்பாம்பு காமெடி கூட நான் போட்டது தான். நான் இயக்குநராகவும் உதவி இயக்குநராகவும் இருந்த காலத்தில் கடுமையாக கோபம் வரும்.

கவுண்டமணி, செந்தில், வினு சக்கரவர்த்தி, ராமராஜன் ஆகிய எல்லோரிடமும் சண்டையிடுவேன். வடிவேலுவுக்கு என் கோபம் பற்றி தெரியும் அதனால் என்கிட்ட வச்சிக்க மாட்டார். அவரே இதை சொல்வார்.

3 வேளையும் கறி சோறு போட்டு என்னை அம்மா, அப்பா மாதிரி பார்த்துக் கொண்டவர் கேப்டன். அவரை பற்றி பேசினால் நான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன் அது முதல் வடிவேலுவுடன் நான் சேர்ந்து நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.