சாலை விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் - சுயநினைவை இழந்தால் சோகம்

Accident actorSaiDharamTej Telugufilmindustry
By Petchi Avudaiappan Sep 10, 2021 11:18 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் சாலை விபத்தில் சிக்கி சுய நினைவை இழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான சாய் தரம் தேஜ் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மருமகன் ஆவார். இவர் ஹைதராபாத்தின் ஜூபிலி ஹில்ஸில் இருந்து காச்சிபவுளி என்ற இடம் நோக்கி சென்றபோது இரவு 8.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையில் சறுக்கி விபத்து நேரிட்டுள்ளது.

இதில் நடிகர் சாய் தரம் தேஜ்க்கு தலை, மார்பு, கை மற்றும் உடலின் பல பகுதிகளில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவரை மீட்ட அப்பகுதி மக்கள் மெடிகோவர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாய் தரம் தேஜ் உடல்நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சுயநினைவை இழந்த இவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சாய் தரம் தேஜ் விரைவில் நலம் பெற வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.