மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன் ஆஜராக நடிகர் எஸ்.வி.சேகருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழக முன்னாள் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை கிள்ளியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வருத்தம் தெரிவித்தார்.
இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக நடிகர் எஸ்.வி. சேகர் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி இழிவான சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டார்.
தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இது தொடர்பாக போலீசார் எஸ்.வி.சேகர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரையடுத்து, எஸ்.வி.சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்த விவகாரத்தில் ஒரு முறை கூட எஸ்.வி.சேகர் விசாரணைக்காக ஆஜராகவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் எஸ்.வி. சேகர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் விசாரணைக்கு நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, இந்த வழக்கை 2 வாரத்திற்கு தள்ளிவைத்துள்ளது.