58 வயதில் 2வது திருமணம் செய்த ஜெயம்ரவி பட வில்லன் - வைரலாகும் லிப்லாக்!

Tamil Cinema Bollywood Marriage Viral Photos
By Sumathi Dec 27, 2023 10:26 AM GMT
Report

ஜெயம் ரவி பட வில்லன் ரோனித் ராய் மனைவியையே 2வது திருமணம் செய்துள்ளார்.

நடிகர் ரோனித் ராய் 

பாலிவுட்டில் ஜான் தேரே நாம்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ரோனித் ராய்(58). ஹீரோவாக சில படங்களிலும் நடித்திருந்தாலும், அதன் பிறகு வில்லனாக மிரட்டினார்.

actor-ronit-roy marriage

தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'பூமி’ படத்திலும் வில்லனாக நடித்திருப்பார். இந்நிலையில், இவர் தனது மனைவி ஜோன்னா நீலம் என்பவரை திருமணம் செய்து 20 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, திருமண நாளிலேயே மீண்டும் திருமணம் செய்துள்ளார்.

2வது திருமணம் செய்யப்போகும் டிடி - யார் அந்த நபர் தெரியுமா!

2வது திருமணம் செய்யப்போகும் டிடி - யார் அந்த நபர் தெரியுமா!

2வது திருமணம்

கோவாவில் உள்ள கோயில் ஒன்றில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் பாலிவுட் நட்சத்திரங்களும் ரசிகர்களும் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

திருமணம் முடித்ததும், தனது மனைவிக்கு உதட்டு முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. திருமணத்திற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.